கல்லூரி, பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும்


கல்லூரி, பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும்
x

பக்ரீத் பண்டிகைக்கு கல்லூரி, பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி எம்.பி. முதல்-அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- வருகிற 10-ந்தேதி அன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளை கொண்டாட உள்ளனர். பக்ரீத் திருநாளை முன்னிட்டு பெரும்பான்மையானோர் வெளி ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று கொண்டாடுபவர்களாக இருக்கின்றார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11.7.2022 அன்றும் பள்ளி, கல்லூரி உட்பட பொது விடுமுறை அளித்தால் சிரமமின்றி பெற்றோர்களும், மாணவர்களும் திரும்புவதற்கு வசதியாக அமையும். பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறு தினம் திங்களட்கிழமையும் பள்ளி கல்லூரி உட்பட பொது விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story