சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

உடன்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழுவும், தமிழ்நாடு நுகர்வோர் பேரவையும் இணைந்து குலசேகரன்பட்டினத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், தூத்துக்குடி சார்பு நீதிபதியுமான பிரித்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீதிமன்றத்தில் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்தாலும், பதில் அனுப்ப இலவச சட்ட மையத்தை அணுகலாம். போலீஸ் நிலையத்தில் உங்களை அழைத்தால் கூட இங்கு விவரம் கேட்கலாம், அரசு நலத்திட்ட உதவி, வரதட்சணை கொடுமை, சட்டம் மற்றும் சட்டம் சாராத பிரச்சினை இப்படி அனைத்து பிரச்சினைக்கும் செலவே இல்லாமல் தீர்வு காண்பதுதான் இலவச சட்ட உதவி மையம். நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை செல்வதற்கு அனைத்து செலவுகளையும் வட்ட சட்ட பணிகள் ஏற்றுக்கொள்ளும். கிராம மக்கள் இதை அதிகமாக பயன்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் பேரவை நிறுவன தலைவர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் கணேசன், பேரவையின் மாவட்ட கவுரவ ஆலோசகர் சுந்தர், திருச்செந்தூர் வட்டார தலைவர் ரகுமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story