அரசு மகளிர் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்


அரசு மகளிர் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
x

ஆரணி அரசு மகளிர் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் மூலமாக ஆரணி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் தாவூத்தம்மாள் அறிவுறுத்தலின்படி ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சட்ட தன்னார்வலரும், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார்.

முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன், வக்கீல் நிர்மலா ஆகியோர் மாணவிகளிடம் சட்டம் குறித்து விளக்கி பேசினர்.

அப்போது, 2012-ல் தொடங்கப்பட்ட போக்சோ சட்டம், தண்டனைகள் அதிகளவில் நமது மாவட்டத்தில் தான் வழங்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு சிறு தவறு, பாலியல் தொந்தரவாக தெரிந்தாலோ மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம்

உங்கள் புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும், சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்க சட்டம் தயாராக இருக்கிறது என்றனா.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story