பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
வேலூரில் பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சதுப்பேரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட உரிமைகள் நீதிபதி மலர்க்கொடி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினர். தனியார் நிறுவனத்தின் நிர்வாகி அயாஸ்அகமது முன்னிலை வகித்தார்.
இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.பாலச்சந்தர், மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவர் சுமதிகபிலன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெண் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
முடிவில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் கண்காணிப்பாளர் எஸ்.கேசவன் கூறினார்.
Related Tags :
Next Story