லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்


லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி

பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

திருவாடானை தாலுகா பாண்டுகுடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை சுவாமி அம்பாள் கோவிலில் இருந்து திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, சீர் வரிசை எடுத்தல், மாலை மாற்றுதல், புண்ணியாக வாஜனம், சங்கல்பம், ஊஞ்சல் உற்சவம், பூணூல் அணிவித்தல், கன்னிகாதானம், நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமியின் கையில் இருந்த தங்கத் தாலியை எடுத்து பட்டாச்சாரியார்கள் ஸ்ரீதேவி பூதேவிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். அதனை தொடர்ந்து அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், வாரணம் ஆயிரம் நிகழ்ச்சிகளும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பாண்டுகுடி முரளி பட்டாச்சாரியார் தலைமையில் நரசிங்கம்பட்டி திருமலை அய்யங்கார் தேவகோட்டை வெங்கடேசன், மண்டலகோட்டை நாராயணன், கோவிந்தராஜ் பட்டாச்சாரியார்கள் ஹோமம் மற்றும் பூஜைகளை நடத்தினர். இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது. மாலையில் பஜனை நிகழ்ச்சிகளும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. பின்னர் சுவாமி- அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் பரிபாலன சபை தலைவர் அரிவாசகன், செயலாளர் ஜானகிராமன், பொருளாளர் கற்பூரம், இணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் முத்துராமன், கண்ணன், இணைச்செயலாளர்கள் செல்வம், வெங்கடேசன் மற்றும் பாண்டுகுடி ஆயிரவைசிய மஞ்ச புத்தூர் மகாசபை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story