விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா


விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா
x

செங்குடி கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடந்தது.விழாவுக்கு பூம்புகார் சட்டமன்ற தொகுதி செயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார்.குத்தாலம் ஒன்றிய துணை செயலாளர் கவியரசன், நிர்வாகிகள் ராஜன், ரமணன், வேளாங்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி செங்குடி சுபாஷ் வரவேற்றார்.இதில் மண்டல செயலாளர் வக்கீல் வேலு.குணவேந்தன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மேலும் செங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.


Next Story