விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
பொறையாறு:
செம்பனார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின், தலைமை தாங்கினார்.ஒன்றிய அமைப்பாளர் பாலா வரவேற்றுபேசினார்.மாவட்ட செயலாளர், ரவிச்சந்திரன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மூர்த்தி, கதிர்வளவன், மாவட்ட துணை செயலாளர்சு.காமராஜ், கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் ரியாஸ்கான் ஆகியோர் பேசினர்.சமூக வலைத்தளங்களில் சாதியையும், பெண்களையும், இழிவுபடுத்திவருபவர்களை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story