விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைசெயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் கோவேந்தன், சிவராமன், விஜயசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை இந்துவாக சித்தரித்து, அவருக்கு காவி உடை அணிந்து நெற்றியில் திருநீறு பூசியது போன்று கும்பகோணத்தில் போஸ்டர்கள் ஒட்டியவர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அம்பேத்கர், பெரியார், அப்துல்கலாம் உள்ளிட்டோரை அரசியல் லாபத்துக்காக மத அடிப்படையில் சித்தரிக்கும் நபர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story