எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்

திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் செயலாளர் பழனிமுத்துமாறன், பொருளாளர் லலிதா மற்றும் நிர்வாகிகள், முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காப்பீட்டு தவணை தொகை மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கி, குழு காப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதேபோல் பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story