தாயாரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
குடும்ப தகராறில் தாயாரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மணலூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சரவணனுக்கும், அவருடைய தாயார் சீனியம்மாள் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் அம்மி குழவியால் சீனியம்மாளின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்தார். இதைத்தொடர்ந்து திருப்புவனம் போலீசார் சரவணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி சாய்பிரியா குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story