வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில்  மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

சேலம்

தொழிலாளி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியை அடுத்த தச்சாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). இவருடைய மனைவி வள்ளி (45). இருவரும் கூலித்தொழிலாளர்கள். மாரிமுத்து கடந்த 2017-ம் ஆண்டு புதிய வீடு கட்ட தொடங்கினார். அப்போது வீடு கட்டுவதில் அதிகம் செலவு ஏற்படுவதாக மனைவியிடம் கூறி தகராறு செய்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, மனைவி வள்ளியை கடப்பாரையால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளி மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.


Next Story