நீலகிரியில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


நீலகிரியில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x

நீலகிரியில் 5 நாட்களில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது என அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் 5 நாட்களில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது என அதிகாரி தெரிவித்தார்.

கோடை சீசன்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் கோடை சீசனில் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். நடப்பாண்டில் கோடை விழாவை கண்டு ரசிக்க அவர்கள் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 25 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மதுபான விற்பனை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரூ.10 கோடிக்கு விற்பனை

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து, டாஸ்மாக் கடைகளில் தேவையான எண்ணிக்கையில் பல்வேறு வகையான மதுபான வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. நீலகிரியில் தினமும் சராசரியாக, ரூ.1.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் நடப்பு மே மாதத்தில் தினசரி சராசரி விற்பனை ரூ.1¾ கோடியாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.10 கோடியை கடந்தது. மேலும் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் திறக்கும் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story