சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது


சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
x

சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர், சாராயம் விற்ற போது திருவண்ணாமலை தாலுகா போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதால் சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story