அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கொங்கு காளை மாடு

அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இதற்கு அந்தியூர், ஈரோடு, எடப்பாடி, கொங்கணாபுரம், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, மேச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்திற்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்திற்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

ஜெர்சி மாடு

ஜெர்சி மாடு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்திற்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், பர்கூர் இன பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், பர்கூர் இன காளைமாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.


Next Story