அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ.1¾ லட்சத்துக்கு கொங்கு காளை மாடு ஜோடி விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ.1¾ லட்சத்துக்கு கொங்கு காளை மாடு ஜோடி விற்பனையானது.
கொங்கு காளை மாடு ஜோடி
அந்தியூரில் கால்நடை சந்தை நடந்தது. இதற்கு மேட்டூர், பண்ணவாடி, கொளத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, தர்மபுரி, ஈரோடு பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்திற்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரத்துக்கும் அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விலை போனது.
நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்திற்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
எருமை மாடு
ஜெர்சி பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.45 ஆயிரத்திற்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.75 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
பர்கூர் காளை மாடு ஜோடி ரூ.40 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.60 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டிகள் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.