சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை


சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது. இந்த சந்தைக்கு தா்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம், மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100- ம், கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு வந்திருந்தன. இதே போன்று சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 125-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 175-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது.

சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது. சந்தையில், மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகள் ரூ.90 லட்சம் வரை விற்றதாக சந்தை நிர்வாகிகள் கூறினர். ஈரோடு, பவானி, கவுந்தப்பாடி, சிறுவலூர், காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், திங்களூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, சென்னிமலை, அறச்சலூர், அவல்பூந்துறை, பெருந்துறை, வெள்ளோடு பகுதி விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கிச்சென்றனர்.


Next Story