ரெயில் மோதி சுமை தூக்கும் தொழிலாளி சாவு


ரெயில் மோதி சுமை தூக்கும் தொழிலாளி சாவு
x

ரெயில் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

மதுரை

வாடிப்பட்டி

சமயநல்லூர் அருகே பரவை முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 35). இவர் பரவை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வனிதா (32) என்ற மனைவியும், மனோஜ் என்ற மகனும் மகாலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் பரவை தனியார் நிறுவனம் முன்பாக ெரயில்வே தண்டவாளத்தில் அவர் இறந்து கிடந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது zரயில் மோதி அவர் இறந்து இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story