ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி
ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு பிரத்யேக சிறப்பு திட்டமாக அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோருக்கு வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த தொழிலுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற கல்வித்தகுதி தேவையில்லை. திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடன், 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். எனவே சொந்த முதலீடு தேவை இல்லை. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி புத்தாக்க நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும். திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவி மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன்பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாக மாவட்ட தொழில் மையம் விளங்கும். விவரங்களை மாவட்ட தொழில் மையத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.