சோளப் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்


சோளப் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்
x
தினத்தந்தி 13 Oct 2022 1:15 AM IST (Updated: 13 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

சோளப்பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் விவசாயிகள் அதிகளவில் சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தர்மபுரியை அடுத்துள்ள சேவிக்கொட்டாய், காரஓணி, நூலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்களை கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்பு அடைந்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து சேவிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்க்கும் மேலாக வெட்டுக்கிளிகள் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலான சோளப்பயிர்களை வெட்டுக்கிளிகள் உணவாக உட்கொள்கிறது. மீதமுள்ள சோளத்தட்டைகளை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்தாலும் கால்நடைகள் சாப்பிடுவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு சேதத்தினை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story