லாரி மோதி மின்கம்பம் சேதம்


லாரி மோதி மின்கம்பம் சேதம்
x

லாரி மோதி மின்கம்பம் சேதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திருச்சியில் இருந்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு லாரி நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் சாலையில் வந்தது. அப்போது எதிரே வந்த ஒரு காருக்கு லாரி டிரைவர் வழி விட்ட போது, எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதனால் மின்கம்பம் 2 துண்டாகி முறிந்தது. இதன் காரணமாக மின்சாரம் தடைபட்டதோடு அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து உடைந்த மின் கம்பத்தில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்து அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பம் சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story