லாட்டரி விற்ற 2 பேர் கைது


லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை தெப்பக்குளம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர் சாலையில் வங்கி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று வருவதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் காமராஜர் சாலை நவரத்தினபுரம் 3-வது தெருவை சுரேஷ்பாபு (வயது 58), முனிச்சாலை பூந்தோட்ட தெருவை சேர்ந்த சீனிவாசன் (55) என்பதும், அவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற 3,280 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


Next Story