தனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக கிடந்தது மதுரை தம்பதி


தனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக கிடந்தது மதுரை தம்பதி
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக கிடந்தது மதுரையை சேர்ந்த தம்பதி என்பதும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

தனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக கிடந்தது மதுரையை சேர்ந்த தம்பதி என்பதும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவன்-மனைவி

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் மற்றும் கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் ஆண், பெண் உடல்கள் கரை ஒதுங்கின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடலோர போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கிடந்த 2 பேரும் மதுரை காந்திநகர் ஆளவந்தான் பகுதியில் உள்ள கருமாரியம்மன் தெருவை சேர்ந்த சோமசுந்தரம்(வயது 66), அவரது மனைவி சுந்தரி (57) என்பது தெரியவந்தது. சோமசுந்தரம் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மகள், திருமணம் முடிந்து கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ெதாழிலில் நஷ்டம்

கொரோனா பரவல் காரணமாக சோமசுந்தரத்தின் தொழில் கடுமையாக பாதிக்கபட்டதால் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பே வீட்டை விட்டு இருவரும் வெளியேறி தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

பின்னர் கடலில் இறங்கி இருவரும் தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்தது. 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டன.


Related Tags :
Next Story