மதுரை: ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்


மதுரை: ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்
x

மதுரை மூன்றுமாவடியில் அரசு பெண்கள் தொழில்பயிற்சிநிலைய விடுதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

மதுரை,

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் பயனுள்ள வேளை வாய்ப்பை பெறவும், தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்குவதற்காகவும் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் வேளை வாய்ப்புள்ள பல புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி மதுரை மூன்று மாவடியில் 1,295 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 20 இலட்சம் மதிப்பில் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதி கட்டப்பட்டது.100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகள் கட்டப்பட்டு உள்ளது.

இந்த விடுதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த விடுதிக்கு அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வந்து குத்துவிளக்கு ஏற்றினர்.


Next Story