சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலைக்கு டெண்டர் அறிவிப்பு


சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலைக்கு டெண்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2022 5:05 AM GMT (Updated: 16 July 2022 5:08 AM GMT)

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்கும் நிறுவனம் இரண்டரை ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.5,770 கோடி மதிப்பீட்டில் 20.6 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையாக அமைக்கப்பட உள்ளது.


Next Story