அகோபிலமடம் ஜீயர் நினைவிடத்தில் மகாசம்ப்ரோக்‌ஷணம்


அகோபிலமடம் ஜீயர் நினைவிடத்தில் மகாசம்ப்ரோக்‌ஷணம்
x

அகோபிலமடம் ஜீயர் நினைவிடத்தில் மகாசம்ப்ரோக்‌ஷணம் நடந்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கத்தில் உள்ள அகோபிலமடத்தின் 44-வது பட்டம் ஜீயராக இருந்த முக்கூர் அழகியசிங்கர் எனப்படும் ஸ்ரீவேதாந்ததேசிக யதீந்திர மகாதேசிகன் ஜீயர் சுவாமிகளின் நினைவிடம் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தசாவதாரர் சன்னதி அருகே உள்ளது. இந்த சன்னதியில் சம்ப்ரோக்‌ஷணம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தற்போதைய 46-வது பீடாதிபதி ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள் அருளாணைப்படி 44-வது பட்டம் ஜீயரின் நினைவிடத்தில் முழு அளவில் திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து இரண்டு நாள் பூர்வாங்க பூஜைகள், யாகசாலை, வேத, பிரபந்த பாராயணங்களைத் தொடர்ந்து நேற்று காலை ஜீயர் சுவாமிகளின் நினைவிட விமானத்திற்கு மகாசம்ப்ரோக்‌ஷணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான சீடர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அகோபிலமடம் காரியதரிசி ராஜகோபால் தலைமையிலான ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story