டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்து போலீஸ்காரர் வெளியிட்ட வீடியோ


டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்து   போலீஸ்காரர் வெளியிட்ட வீடியோ
x

உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு கோரிக்கை விடுத்து, ராமநாதபுரம் போலீஸ்காரர் வெளியிட்ட வீடியோ பரவி வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு கோரிக்கை விடுத்து, ராமநாதபுரம் போலீஸ்காரர் வெளியிட்ட வீடியோ பரவி வருகிறது.

டி.ஜி.பி.க்கு வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கோடரியேந்தல் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். போலீஸ்காரர். கடந்த 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்து, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது மதுரை பட்டாலியனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் பணியில் சேர்வதற்கு முன்னதாக அவர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க நேரம் கேட்டு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்

காவல்துறை என்பது ஒரு குடும்பம் போன்றது. அந்த குடும்பத்தை சேர்ந்த நான், எனது குடும்பம் குறித்த தகவலை ஒட்டுமொத்த போலீசாரின் தந்தையாகிய தங்களிடம் தெரிவிக்க பலமுறை முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். ஆனால், தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்கவிடாமல் செய்துவிடுகின்றனர். எனவே, எனது நிலையை எடுத்துக்கூற நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரி கடைசி ஆயுதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

காரணம் என்ன?

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள போலீஸ்காரர் கனகராஜ், ஏற்கனவே சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவரது மனைவியான ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய பெண் ேபாலீஸ் முருகவள்ளி விவாகரத்து வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ராமநாதபுரம் பஜார் காவல்நிலைய இன்ஸ்பெக்டரின் பதவி குறித்து கனகராஜ் கடுமையாக பேசுவதுபோன்று ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டி.ஜி.பி.யை சந்திக்க நேரம் கேட்டு தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விசாரித்தபோது அவருடைய மனைவி அளித்த புகார் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கவே, டி.ஜி.பி.யை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கனகராஜ் பட்டாலியனில் பணியாற்றி வருவதால் அவர் குறித்து தெரிவிக்க முடியாது, என்றார்.


Related Tags :
Next Story