கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை

இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமை தாங்கினார். வனவிலங்கு அதிகாரி பிரபா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலம், ஓங்கிகள், கடல்பன்றி, கடல்பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் சங்குகள் உள்ளிட்ட 52 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பதை தவிர்த்து, மீனவர்கள் கடல்வளத்தையும், நாட்டின் வளத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் மாணவர்கள், மீனவர்கள் மற்றும் கடலோர போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story