கடலாடி ஒன்றிய குழு கூட்டம்


கடலாடி ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. கடலாடி ஒன்றிய குழுத்தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன், துணைத்தலைவர் ஆத்தி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய மேலாளர் பால தண்டாயுதம் வரவேற்றார். கூட்டம் தொடங்கியவுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து ஒன்றிய குழு தலைவரிடம் தமிழக அரசு மீது தவறாக பொய் பிரசாரம் செய்யும் துணை தலைவர் ஆத்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பரிசீலிப்போம் என ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன் கூறியதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் மாயகிருஷ்ணன் பேசும் போது, ஓரிவயல், மாரந்தை, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊருணிகளில் படித்துறை அமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் குமரையா பேசும் போது கீழச்செல்வனூர் கிராமத்தில் இருந்து நொண்டி கருப்பணசாமி கோவில் செல்லும் சாலையில் தார் சாலை அமைக்க வேண்டும் என்றும், கவுன்சிலர் பிச்சை பேசும் போது, ஏர்வாடி பகுதியில் கோடை காலம் நெருங்குவதால் காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இது போல் அனைத்து கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.


Next Story