மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்


மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்
x

மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

நாகப்பட்டினம்

10,12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையதள முகவரி

நாகை மாவட்டத்தில் உள்ள 2021-22-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதள முகவரியில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை "இ சேவை" மையம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பதிவு செய்து பயன் அடையலாம்

நாகப்பட்டினம், திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த பதிவுதாரர்கள் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த பதிவுதாரர்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் தங்களது பதிவினை செய்து பயன்அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story