மாசி மக பிரம்மோற்சவ விழா


மாசி மக பிரம்மோற்சவ விழா
x

மாசி மக பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக கட்டப்பட்ட பிரஹன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவில், யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதன சின்னமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசிமக பிரமோற்சவ விழாவானது கடந்த 25-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 10-ம் நாளான நேற்று மாசிமக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான சுவாமி- அம்பாள் கோவில் குளத்தில் எழுந்தருளிய பின், தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் புனித நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். மாசி மாதம் சிவன், விஷ்ணு மற்றும் முருகன் ஆகிய சுவாமிகளுக்கு உகந்த மாதம் என்பதாலும், மாசி மகத்தில் விரதமிருந்து ஸ்நானம் செய்து வழிபடுவதால் இத்தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பதாலும், பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்பதாலும் மாசி தீர்த்தவாரியில் பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story