மயிலாடுதுறை: சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள் வரவழைப்பு


மயிலாடுதுறை: சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள் வரவழைப்பு
x

சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டதில் உள்ள செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடி கொண்டிருந்தது அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுத்தை தற்போது ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறுகையில், சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள், வலைகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிநவீன சென்சார் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




Next Story