மெக்கானிக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


மெக்கானிக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

மெக்கானிக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர்

பிளஸ்-2 மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கார் மெக்கானிக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பிளஸ்-2 மாணவி

தஞ்சை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதற்காக புறப்பட்டபோது வழக்கமாக செல்லும் பஸ்சை தவற விட்டு விட்டார்.

இதையடுத்து, கீழவஸ்தாசாவடியை சேர்ந்த உறவினரான கார் மெக்கானிக் அக்பர் அலியுடன்(39) மோட்டார் சைக்கிளில் அச்சிறுமியை பெற்றோர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அக்பர் அலி சிறுமியை ஏற்றிக்கொண்டு தஞ்சை நோக்கி வந்தார். பாதி வழியில் வந்தபோது, பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அக்பர் அலி கூறி, அச்சிறுமியை காரில் அழைத்து சென்றார்.

பாலியல் கொடுமை

ஆனால் அச்சிறுமியை, பள்ளிக்கு செல்லும் பாதையில் அழைத்துச்செல்லாமல் வேறு பாதையில் அழைத்து சென்றார். பின்னர் சிறுமியை காரில் 7 மணி நேரம் வைத்து அக்பர் அலி பாலியல் கொடுமை செய்தார். மாலையில் வீட்டுக்குத் திரும்பிய அச்சிறுமி டந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்பர் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

20 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஜி.சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட அக்பர் அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story