இலவச சித்த மருத்துவ முகாம்


இலவச சித்த மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

காவேரிப்பட்டணத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை, ஆர்ய வைஸ்ய சமாஜம் மற்றும் ஜே.சி.ஐ. இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தின. டாக்டர் மரியா ஜூலியட் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ. நிர்வாகிகள் ராகேஷ், அசோக்குமார், ஆறுமுகம், தினேஷ், லட்சுமணன், வடிவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அசோகன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி, ஆரிய வைஸ்ய சமாஜ நிர்வாகிகள் ஸ்ரீதர், சதீஷ்குமார், நாககணேஷ், பாலாஜி, முருகன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story