எஸ்.வாழவந்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு


எஸ்.வாழவந்தியில்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு
x

எஸ்.வாழவந்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது. இதற்கு புதிய மன்ற கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா மற்றும் கலசவிளக்கு வேள்வி பூஜை விழா நடந்தது. கொமாரபாளையம் காவிரி ஆற்றிற்கு சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை 7 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கொடி ஏற்றுதலும், கலசவிளக்கு வேள்வி பூஜையும், சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எஸ்.வாழவந்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story