ஒரத்தநாட்டில், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஒரத்தநாட்டில், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஒரத்தநாட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஒரத்தநாட்டில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.துரைராஜ் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.மோகன்தாஸ், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் சி.மெய்க்கப்பன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க ஒரத்தநாடு ஒன்றிய நிர்வாகி தங்க.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் கோரிக்கை குறித்து பேசினார்.

கோரிக்கை மனு

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் ஒரு லிட்டருக்கு ரூ.51 என உயர்த்தி வழங்க வேண்டும் தஞ்சை ஆவின் ஒன்றியத்தில் 2020-21 -ம் ஆண்டுக்கான தணிக்கையின்படி, ஆவின் லாபத்தில், லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.25 ஊக்க தொகையை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்த பின்பும் இதை வழங்காமல், அதை பங்கு எனக் கூறி 70 சதவீதம் தொகையை ஆவின் பிடித்தம் செய்துள்ளது. எனவே, முழுத் தொகையையும் கறவையாளர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story