பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

புதுச்சத்திரம், திருச்செங்கோடு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லியாயிபாளையம் பால் சொசைட்டி முன்பு பசும்பால் கொள்முதல் விலையை ரூ.42, எருமை பால் கொள்முதல் விலையை ரூ.51 என உயர்த்தி அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதாசிவம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆரம்ப சங்க பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

திருச்செங்கோடு

இதேபோல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திருச்செங்கோடு பகுதி கிளைகள் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 அதிகப்படுத்தி அறிவித்திட வேண்டும், ஆவின் கலப்புத் தீவனம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

பால் விற்பனை விலையை 1 லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்ததால் ஏற்படும் இழப்புத் தொகை ரூ.270 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்கிட வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்கிட வேண்டும், கர்நாடக அரசு போல் 1 லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் வேலாயுதம், மாவட்டத் துணை தலைவர் ஜோதி, மனோகரன், ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பால் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம் கண்டன விளக்கவுரையாற்றினார். இறுதியாக பால் சங்க மாவட்ட பொருளாளர் தங்கரத்தினம் நன்றி கூறினார். இதில் பால் உற்பத்தியாளர்கள் 40 பேர் பங்கேற்றனர்.


Next Story