மினி பஸ்-ஸ்கூட்டர் மோதல்; கன்னியாஸ்திரி பலி


மினி பஸ்-ஸ்கூட்டர் மோதல்; கன்னியாஸ்திரி பலி
x

திங்கள்சந்தை அருேக ஸ்கூட்டர் மீது மினி பஸ் மோதிய விபத்தில் கன்னியாஸ்திரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மினி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருேக ஸ்கூட்டர் மீது மினி பஸ் மோதிய விபத்தில் கன்னியாஸ்திரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மினி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாஸ்திரி

தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை மணல் மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் குருசு மிக்கேல். இவருடைய மகள் ஜெய செல்வி (வயது 37). கன்னியாஸ்திரியான இவர் குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பட்டரிவிளையில் ஏசுவின் திருஇருதய கன்னியர் மடத்தில் தங்கியிருந்தார். மேலும் அங்குள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் ஜெயசெல்வி பள்ளவிளை புனித ஜார்ஜியார் ஆலய திருப்பலிக்கு செல்வதற்காக பட்டரிவிளையில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார்.

மினி பஸ் மோதி சாவு

புதுவிளை பகுதியை சென்றடைந்த ேபாது பின்னால் ஒரு மினி பஸ் வந்தது. இந்தநிலையில் அந்த மினி பஸ் ஜெயசெல்வி சென்ற ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்ற போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கீழே விழுந்த ஜெயசெல்வியின் தலை மீது மினி பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினார்.

உடனே அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக மினி பஸ் டிரைவர் பிலாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் பாண்டியன் (27) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story