மினி வேன் உரிமையாளர், டிரைவர் கைது


மினி வேன் உரிமையாளர், டிரைவர் கைது
x

ஆம்பூர் அருகே நடந்த விபத்தில் 37 பெண்கள் காயமடைந்த சம்பவத்தில் மினி வேன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் மோட்டுகொல்லை பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் கடந்த 30-ந்் தேதி மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர். இவர்களை அழைத்துச் சென்ற மினி வேன் ஆம்பூரை அடுத்த பார்ப்பனபள்ளி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வாணியம்பாடியை அடுத்த சந்தாபுரம், தும்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 37 பெண்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மினி வேனில் பயணம் செய்த வாணியம்பாடியை அடுத்த அல்சந்தாபுரம் பகுதியை சேர்ந்த சாமண்ணன் மனைவி உமா (வயது 40) அளித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மினி வேன் உரிமையாளர் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (5), டிரைவர் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த ஜான் தினகரன் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story