வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி;சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது; 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

x
தினத்தந்தி 21 March 2023 4:35 AM GMT (Updated: 21 March 2023 7:23 AM GMT)

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Live Updates

  • தென்னையின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
    21 March 2023 6:29 AM GMT

    தென்னையின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டு சமையலில் தேங்காய்க்கு பெரும்பங்கு உண்டு. தென்னையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும், தென்ன்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில், வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல் விளக்கத்திடல்கள் பத்தாயிரம் ஹெக்டர்கள் பரப்பில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகளை தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு – புத்தாக்கத் திட்டம் 20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

    குட்டை –நெட்டை வீரிய ஒட்டு ரக தென்னைக்கு அதிக தேவை இருப்பதால், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்னை நாற்றுப் பண்ணிகளைல் கூடுதலாக 10 ஆயிரம் குட்டை – நெட்டை வீரிய ஒட்டு ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.

  • பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா
    21 March 2023 6:05 AM GMT

    பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.

    தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்"

    "குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு"

    பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலாவுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு

    வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள கல்வித்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

  • மிளகாய் மண்டலம்;பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம்- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
    21 March 2023 5:59 AM GMT

    மிளகாய் மண்டலம்;பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம்- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள்: தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

    பலா இயக்கம்: பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * மிளகாய் மண்டலம்: ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.செய்யப்படுகிறது.ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிளகாய் மண்டலம் செயல்படுத்தப்படும்"

    "வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியில் திட்டம்;தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம்"

    தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திண்டுக்கல் தேனி திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

    நுண்ணீர் பாசன முறை பின்பற்றி நிலத்தடி நிறை சரியாக பயன்படுத்தி அதிக சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஆண்டின் திட்டத்தின் சுமார் 60% நிதியான 650 கோடி ரூபாயை 53,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

    தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்

    "உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்"

  • மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ₹7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்!
    21 March 2023 5:46 AM GMT

    மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ₹7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்!

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ₹7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்!

    மல்லிகைப் புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்படும். மல்லிகை மதுரையில் மட்டுமின்றி விருதுநகர் திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய இடங்களில் 4,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக பருவமில்லா காலங்களில் உற்பத்தியை உறுதி செய்யப்படும்.

    தொடர் திட்டமாக ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தேவையான தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வகை செய்யப்படும் மல்லிகை சாகுபடிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நடவு செய்யவும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்காக ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும்.

    வரும் ஆண்டில் இத்திட்டம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

    கடலூர், குமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ₹3 கோடி நிதி ஒதுக்கீடு;

    5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு!

    எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை"

    தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி, முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1,000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு"

    கோவையில், கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ₹2.5 கோடி ஒதுக்கீடு!

    "அரியலூர், கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும்"

  • கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்
    21 March 2023 5:40 AM GMT

    கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    "சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கழிவிலிருந்து, மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு"

    மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்

    கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்

    "கேள்வரகு, கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்"

  • “குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
    21 March 2023 5:34 AM GMT

    “குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    "கேள்வரகு, கம்பு ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்"

    "நீலமலையில் ரூ.50 கோடி செலவில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு மையம்"

    பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு"

    “60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்”

    குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்”-

    "வண்டல் மண்ணை விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும்"

  • சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்
    21 March 2023 5:22 AM GMT

    சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்

    “சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும்” - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    "விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும் இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு"

    "அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்" இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்"

    "வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்"

    "வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்"

    "சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு"

    "விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு"

  • கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு
    21 March 2023 5:09 AM GMT

    "கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    "நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்"

    "2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்"

    "சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்"

    "மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

    எல்லாருக்கும் கொடுங்க சாப்பிட தயாராக உள்ளனர் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    "வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு"

    "கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு"

Next Story