தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31-ந்தேதி வருகை-விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு


தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31-ந்தேதி வருகை-விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு
x

தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31-ந்தேதி வருவதையொட்டி விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தென்காசி

தென்காசி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென்காசி வருகிறார். தென்காசி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்து வைப்பதுடன், புதிய கால்வாய் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான விழா, தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் உள்ள இசக்கி மகாலில் நடக்கிறது. இதையொட்டி அந்த மகால் வளாகத்தை மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் சுப்பையா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனி துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.



Next Story