மழைக்காலம் : பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் - தமிழக அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி ,அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். பேருந்து உட்பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க பணிமனைகளில் முறையான பராமரிப்பு அவசியம் . மேற்கூரை, படிக்கட்டுகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story