காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பு


காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பு
x

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

மழை குறைந்தது

கர்நாடகத்தில் மழை குறைந்துவிட்டதால் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. கடந்த 15-ந் தேதியில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒருலட்சம் கன அடிக்கு அதிமாக இருந்தது. 18-ந் தேதிவரை ஒரு லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணைக்கு 95,552 கன அடி தண்ணீர் வந்தது.நேற்று மாலை நீர்வரத்து 76,616 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையிலிருந்து 50,472 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 73.29அடியாக இருந்தது. கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக நேற்று 3004 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது.

கரைகளை தொட்டு செல்லும் தண்ணீர்

கல்லணையில் இருந்து காவிரியில் 8502 கனஅடி, வெண்ணாற்றில் 9003 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கல்லணைகால்வாய் பகுதியில் மாரநேரி, மோளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2 கரைகளையும் தொட்டு நிரம்பி தண்ணீர் விரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 24,650கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 58ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது.


Next Story