ஓமலூர் அருகேகள்ளக்காதலால் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய்


ஓமலூர் அருகேகள்ளக்காதலால் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய்
x

ஓமலூர் அருகே கள்ளக்காதலால் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாயை போலீசார் மீட்டனர்.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில் 35 வயதுடைய ஒருவர் பட்டுத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு 30 வயதான மனைவியும், 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரின் விசைத்தறி கூடத்துக்கு செம்மாண்டப்பட்டி பட்டுத்தறி கூட உரிமையாளரின் மனைவி பட்டு நெசவு செய்யும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பட்டுத்தறி கூட உரிமையாளருக்கும், அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு அந்த பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இது பற்றி அந்த பெண்ணின் கணவர் ஓமலூர் போலீசில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இதனை அடுத்து அந்த கள்ளக்காதலனுடன் இருந்த அந்த பெண்ணை கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண்ணிடம் கணவரும், அவருடைய 2 குழந்தைகளும் தங்களுடன் வருமாறு கெஞ்சி அழுதனர். ஆனால் அவர் வர மறுத்து கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் கள்ளக்காதலனுடன் அந்த பெண்ணை அனுப்ப மறுத்த போலீசார், திருப்பூரில் இருக்கும் அந்த பெண்ணின் தாயாரை அழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் அந்த கள்ளக்காதலனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, மகன், மகள்களும் உள்ளனர். அவருடைய மனைவி போலீஸ் நிலையத்திற்கு வந்து தகராறு செய்து கணவரை தன்னுடன் வருமாறு வலியுறுத்தினார். இதையடுத்து கள்ளக்காதலியுடன் வந்த பட்டுத்தறி கூட உரிமையாளரை போலீசார் எச்சரித்து அவருடைய மனைவியுடன் அனுப்பி வைத்தனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலுடன் ெசல்ல முயன்ற சம்பவம் பார்ப்போரை கண் கலங்க செய்தது.



Next Story