மோட்டார் சைக்கிள்-செல்போன் திருட்டு


மோட்டார் சைக்கிள்-செல்போன் திருட்டு
x

மோட்டார் சைக்கிள்-செல்போன் திருட்டு போனது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே வாகைப்பட்டியை சேர்ந்தவர் ரிசிகுமார் (வயது 19). இவர், வீட்டின் அருகே புதிதாக வீடு ஒன்று கட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளிபுறத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரது செல்போனை மோட்டார் சைக்கிள் அருகே வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் காலையில் வந்து பார்த்த போது வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story