டி.என்.பாளையத்தில் மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்; பெண் பலி- கணவர் கண்முன்னே பரிதாபம்
டி.என்.பாளையத்தில் மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்; பெண் பலி- கணவர் கண்முன்னே பரிதாபம்
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தில் மோட்டார்சைக்கிள்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார். கணவர் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கணவருடன் சென்ற பெண்
கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). அவருடைய மனைவி பூங்கொடி (50). கூலி தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று காலை வேலைக்காக டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கொன்னகொடிகால் என்ற இடத்தில் தனியார் நிறுவன தொழிலாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த சுந்தரம் மகன் இளையகுமார் (30) என்பவர் பின்னோக்கி இயக்கியுள்ளார்.
விபத்தில் சாவு
அப்போது அந்த வழியாக வந்த மணியின் மோட்டார்சைக்கிளும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மணியும், பூங்கொடியும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மணி லேசான காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த பூங்கொடி கணவர் கண் முன்னே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மணியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பூங்கொடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.