கழுகுமலையில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் படுகாயம்


கழுகுமலையில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில்மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில ்போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் படுகாயமைடந்தார். அவருடன் வந்த இளம்பெண் லேசான காயத்துடன் தப்பினார்.

போலீஸ்காரர்

பசுவந்தனை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த எட்டுவேல் மகன் பூபதிராஜா(வயது (25). இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசாராக பணியாற்றி வருகிறார். இவரும், உறவினரான உமாமகேஸ்வரி(25) என்பவரும் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கழுகுமலை அருகே உள்ள வின்சென்ட் நகர் பகுதியில் சென்றபோது, முன்னாள் கழுகுமலையை சேர்ந்த ஐஸ் வியாபாரியான மாடசாமி (73) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

படுகாயம்

அவர், தனது வீட்டிற்கு செல்வதற்காக திடீரென மோட்டார் சைக்கிளை வலது பக்கமாக திருப்பினார். இதனால் பின்னால் வந்த பூபதிராஜா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பூபதிராஜா பலத்த காயமடைந்தார். உமாமகேஸ்வரி லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்துதகவல் அறிந்த கழுகுமலை போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பூபதிராஜாவை மீட்டு கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பூபதிராஜா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story