மூவேந்தர் பண்பாட்டுக்கழக கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மூவேந்தர் பண்பாட்டுக் கழக செயற்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்ட மூவேந்தர் பண்பாட்டுக் கழக செயற்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மூவர் தலைமை தாங்கினார். உயர் மட்ட குழு தலைவர் வீர.மருது பாண்டியன், மூவேந்தர் பணியாளர் நலச்சங்க நிறுவனர் அங்குசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உத்தமநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் மாமன்னர்கள் மருது பாண்டியர் குருபூஜை விழாவிற்கும் 30-ந் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும், குருபூஜைக்கு வரும் போது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதை தவிர்த்து மலர் மாலைகள் வைத்து வழிபட வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கமுதி, ராமநாதபுரம், பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் ஆகிய ஒன்றிய, நகர், கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.