வேலூர் ஜெயிலில் 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
வேலூர் ஜெயிலில் 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.
வேலூர் ஜெயிலில் 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்கவும் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று 5-வது நாளாகவும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும் அவர் அதிகாரிகள் யாரிடமும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். அவர் சோர்வடைந்துள்ளதாக தெரிகிறது. அவரை சிறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முருகனை, அவரது வக்கீல் புகழேந்தி நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், முருகன் சாப்பிடாமல் யாருடனும் பேசாமல் ஜீவசமாதி அறநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். தன்னை விடுதலை செய்ய ஜெயில் அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லை. விடுதலைக்காக போராட உடலிலும், மனதிலும் சக்தி இல்லை என்று முருகன் எழுத்து மூலம் தெரிவித்தார் என்றார்.