கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு


கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 22 July 2023 6:24 PM IST (Updated: 22 July 2023 6:34 PM IST)
t-max-icont-min-icon

முத்தமிழ் பேரவை 42 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது.

சென்னை,

சென்னை , ஆர்.ஏ. புரதத்தில் முத்தமிழ் பேரவை 42 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது . ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும் . வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,

முத்தமிழ் பேரவை இசை விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அமிர்தம் பன்முகத்தன்மை கொண்டவர். முத்தமிழை பேரவையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அமிர்தம்.கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும் .சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா .இசை உலகில் இளம் புயலாக வலம் வருபவர் பின்னணி பாடகி மஹதி. என தெரிவித்தார்.


Next Story