முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:46 PM GMT)

வழுதூர் கிராமத்தில் முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

மண்டபம் யூனியன் வழுதூர் கிராமத்தில் முத்துவேலம்மன் மற்றும் ஆண்டி அய்யா கோவில் உள்ளது. இங்கு நாகநாதர், சிம்மம், ராக்கச்சி அம்மன், குண்டாத்திவீரன் கருப்பணசாமி, கள்வடி, தர்ம முனீசுவரர், பட்டானி தெய்வம், தொண்டியான், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் புதிதாக தோரணவாயில் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருப்பணிகளும் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து கடந்த (4-ந்தேதி) காலை 8.30 மணி முதல் அனுக்ஞை, விநாயகர் பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு அன்று மாலை 6.30 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், காப்பு கட்டுதல், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றன.

கடந்த 5-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.

நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பாபு சாஸ்திரிகள் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க முத்துவேலம்மன், ஆண்டி அய்யா மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், புதிய தோரண வாயிலுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story